இறுதியாண்டு பரீட்சைக்காக திறக்கப்படும் பல்கலைக்கழகங்கள்

0

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்ட பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டங் கட்டமாக திறக்கப்படவுள்ளன.

எனினும் பல்கலைக்கழகத்துக்குள் ஒன்றுக்கூடல், விளையாட்டு என்பனவற்றுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பல்கலைகழங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.