இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பு எம்.பிக்கள் அஞ்சலி

0

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

முள்ளிவாய்கால் 12ஆவது ஆண்டு நினைவு நாள் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர் பகுதிகளிலும் இன்று(செவ்வாய்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையிலேயே இன்றைய தினம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

குறித்த நிகழ்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், கலையரசன், சிறிதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை, இறுதிப் போரில் உயிரிழந்த தமிழ் உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன்று அனுஷ்டிக்க ‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக மக்களை ஒன்றிணையுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் இன்று தரணியெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா வைரஸ் சமூகத் தொற்றைக் கருத்தில்கொண்டு ‘சூம்’ இணையத்தினூடாக மக்களை ஒன்றிணையுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.