பெண் முயற்சியான்மையாளர்களுக்கு அமெரிக்க அரசாங்கம் உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர முயற்சியான்மைகளில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு அமெரிக்க அராங்கம் 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி உதவியாக வழங்குகின்றது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் இந்த விடயம் குறித்து இன்றைய தினம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பெண்களினால் நடாத்தப்பட்டு வரும் முயற்சியான்மைகள் அல்லது பெண்களை வலுவூட்டுவதற்கான பொருட்கள் சேவைகளை வழங்கும் முயற்சியான்மைகள் என்பனவற்றுக்கு இவ்வாறு கடனுதவி வழங்கப்பட உள்ளது.
என்.டி.பி வங்கியின் ஊடாக இந்த கடனுதவி வழங்கப்பட உள்ளதாக தூதரகம் அறிவித்துள்ளது.
பெண்கள் தொழில் முயற்சிகளில் உயர் பதவிகளை வகிப்பதனை உறுதி செய்வதற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.