இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங் நியமனம்!

0

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் துணை வெளியுறவு செயலாளர் Wendy R. Sherman இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

ஜூலி சங் இதற்கு முன்னர் மேற்கு அரைக்கோள விவகாரங்களுக்கான மாநில உதவி செயலாளராக பணியாற்றியுள்ளார். அத்துடன், இவர் செயலாளரின் சிறப்பு மரியாதை விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும் முன்னதாக இவர் கம்போடியாவின் புனோம் பென் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தலைவராகவும் தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இடைநிலை ஒருங்கிணைப்பாளருக்கு சுங் தலைமை பணியாளராகவும் பணியாறிறயுள்ளார்.

மேலும் கொலம்பியா, வியட்நாம் மற்றும் ஜப்பானில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும், சீனாவின் குவாங்சோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.