இலங்கைக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியது எமிரேட்ஸ் !

0

எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் நிறுவனமானது இலங்கைக்கான தனது விமான சேவை நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ஜிய அரசாங்கம் பிறப்பித்த உத்தரவு, இலங்கை அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் கோவிட் -19 பாதிப்பை குறைதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இறுதி எமிரேட்ஸ் விமானம் ஈ.கே.-651 நேற்று இரவு 9.55 மணியளவில் காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய்க்கு புறப்பட்டது.

இதேவேளை பல விமான நிறுவனங்களும் இலங்கைக்கான தங்கள் விமான சேவை நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளன.

இருப்பினும் லண்டனுக்கான யுஎல் -503 இலங்கை எயார்லைன்ஸ் விமானம் இன்று பிற்பகல் 12:50 மணிக்கு கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட உள்ளது என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.