இலங்கைக்கு உலக வங்கியால் 128 மில்லியன் டொலர் அவசர நிதியுதவி!

0

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு அவசர உதவிகளை செய்ய உலக வங்கி தீர்மானித்துள்ளது.

கொரோனாவினால் தற்போது அதிக பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள உலக நாடுகளுக்கு இந்த அவசர உதவி வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்படவுள்ளது.

இலங்கையின் மருத்துவ தேவைகளுக்காக இந்த நிதி வழங்கப்படவுள்ளது.