இலங்கைக்கு காத்திருக்கும் பேராபத்து! பேராசிரியர் மலித் பீரிஸ் எச்சரிக்கை

0

இலங்கையில் மிக மோசமான கோவிட் நோய் வரும் மாதங்களில் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மலித் பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் இணையம் மூலம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், புதிய டெல்டா மாறுபாடு காரணமாக தெற்காசிய பிராந்தியம் உட்பட உலகளவில் நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளது. எதிர்வரும் வாரங்களில் இந்த பிரச்சினை இலங்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அடுத்த சில வாரங்களில் இலங்கை மிக மோசமான கோவிட் தொற்றுநோயை எதிர்கொள்ளும் என்றும் அவர் எச்சரித்தார்.

இலங்கையில் துரிதமான தடுப்பூசி நடவடிக்கைகளுக்கு அரசுக்கும், பேராசிரியர் சன்னா ஜயசுமனவுக்கும் நன்றி தெரிவித்த அவர், வரும் மாதங்களில் கோவிட் வைரஸிலிருந்து பாதுகாக்க இரண்டு டோஸ் தடுப்பூசி கூட போதாது என்று எச்சரித்தார்.