இலங்கையர்களுக்கான முதலாவது தடுப்பூசி தொடர்பில் வௌியான செய்தி!

0

கொவிட் 19 வைரஸிற்கான முதலாவது தடுப்பூசியை இந்நாட்டவர்களுக்கு பெற்றுக்கொடுக்கக்கூடிய தினம் தொடர்பில் ஜனாதிபதி பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க வௌிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் கொவிட் 19 வைரஸிற்கான முதலாவது தடுப்பூசியை இந்நாட்டவர்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும்.

அதற்கான கலந்துரையாடல் தற்போது இறுதி மட்டத்தில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.