இலங்கையர்கள் பூரண சந்திர கிரகணத்தை பார்வையிட சந்தர்ப்பம்

0

பூரண சந்திர கிரகணத்தை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் இலங்கை மக்களுக்கு கிட்டவுள்ளது.

இன்றிரவு(வெள்ளிக்கிழமை) 11.15 முதல் நாளை அதிகாலை 2.34 வரை இந்த பூரண சந்திரகிரகணம் தோன்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை அதிகாலை 12.56 அளவில் இந்த சந்திரகிரகணம் முழுமையடையவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சூரியனும் சந்திரனும் பூமியும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சந்திரகிரகணம் தோன்றுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.