இலங்கையின் ஒரு பகுதி வாழ் மக்களை வியப்பில் ஆழ்த்திய இயற்கை!

0

பலங்கொட கல்தோட்டை, வெலிஓய நகரத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் நேற்று மாலை ஆழங்கட்டி மழை பெய்துள்ளது.

ஒரு மாத கால வறட்சியின் பின்னர் நேற்று குறித்த பகுதியில் மழை பெய்துள்ளது. இதன்போது ஆழங்கட்டிகளும் கொட்டியதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் 3.30 – 4.00 மணி வரையிலான காலப்பகுதியில் இந்த ஆழங்கட்டி மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வெலிஓய பிரதேசத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஆழங்கட்டி மழையை பார்த்ததில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.