இலங்கையின் கிராமம் ஒன்றை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மிருகம் – இருவர் மரணம் – பீதியில் மக்கள்

0

களுத்துறை, மில்லனிய கிராமத்தில் நரிகள் அச்சுறுத்துவதால் முழு கிராமமே பீதியில் இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

கும்பலாக நரிகள் கிராமத்திற்குள் புகுந்து மக்களை கடித்து குதறுவதனால் மக்கள் கடும் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

கும்பலாக நரிகள் கிராமத்திற்குள் புகுந்து கடிப்பதனால் மக்கள் உச்சகட்ட பீதியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் 8 வயதுடைய சிறுமியின் கழுத்தை நரி கடித்தமையினாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிததுள்ளது.

அத்துடன் கடந்த ஒரு மாதத்திற்குள் அந்த கிராமத்தில் மேலும் ஒருவர் நரி கடித்து உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.