இலங்கையின் சனத்தொகை சடுதியாக குறைவடையும்! ஆய்வில் வெளியான தகவல்

0

இலங்கையின் சனத்தொகை தற்போதுள்ள எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு நோக்கும் போது 2100ம் ஆண்டளவில் அதாவது இன்னமும் 80 ஆண்டுகளில் சரிபாதியாக குறைவடைந்தவிடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

The Lancet என்ற முன்னணி ஜேர்னல் இதழ் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையின் குழந்தைகள் பிறப்புவீதம், இறப்பு எண்ணிக்கை, குடிப் பெயர்வு மற்றும் சனத்தொகையில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஏனைய காரணிகள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு 195 நாடுகளில் நடத்தப்பட்ட உலகளாவிய ஆய்வின் முடிவில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, 2100ம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகை 10.45 மில்லியன்களாக அதாவது பத்து லட்சத்து 450 ஆயிரமாக குறைவடையும் எனஎதிர்வுகூறல் வெளியாகியுள்ளது.

2017ம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகை 21.60 மில்லியன்களாக அதாவது இரண்டு கோடியே 600 ஆயிரமாக காணப்பட்டது. 2031ம் ஆண்டளவில் இலங்கையின் சனத்தொகை அதிக பட்சமான உச்சத்தை தொடும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளதுடன்.

அப்போது 22.34 மில்லியன்களாக அதாவது இரண்டு கோடியே 23 லட்சத்து 400 ஆயிரமாக காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் படி 2017ம் ஆண்டில் இலங்கையிலுள்ள பெண்ணொருவர் சராசரியாக பெற்றெடுத்துள்ள பிள்ளைகளின் அளவு 1.80 ஆக கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கை 80 ஆண்டுகளில் 1.46 ஆக குறைவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார பரிந்துரைகளின் குழந்தைகள் பிறப்பு வீதம் 2.1 என்ற சராசரி எண்ணிக்கையை காணப்படின் அந் நாட்டின் சனத்தொகை வீழ்ச்சிகாணும் என தெரிவிக்கப்படுகின்றது.