இலங்கையின் தற்போதைய நெருக்கடி குறித்து நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பிரதிப் பணிப்பாளரை சந்தித்து பேசினார் சாணக்கியன்!

0

நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பிரதிப் பணிப்பாளர் Sigbjørn Tenfjord இற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இரா.சாணக்கியன் நோர்வேக்கு விஜயம் செய்துள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடிகள் அதனால் தற்போது ஏற்படுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பிலும், இவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.