இலங்கையின் 13 பகுதிகளில் கொரோனா நோயாளிகள்

0

மினுவாங்கொட கொரோனா கொத்தணிக்கு தொடர்புடைய 115 பேர் நேற்றை தினம் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்கள் 13 பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானார் மினுவாங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். அவர்களின் எண்ணிக்கை 32 ஆகும். இதற்கு மேலதிகமாக கட்டுநாயக்காவில் 30 பேரும் திவுலப்பிட்டியவில் 24 பேரும், பிங்கிரியவில் 11 பேரும் கம்பஹா பிரதேசத்தில் 10 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக மத்துகம, ராகம, காலி, குளியாப்பிட்டிய, நிட்டம்புவ, கொட்டிகாவத்த, கராப்பிட்டிய மற்றும் கஹத்துடுவ ஆகய பிரதேசங்களில் இருந்து தலா ஒரு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.