இலங்கையிலும் ஒமிக்ரோன் தொற்று?

0

கொரோனாவின் புதிய பிறழ்வான ஒமிக்ரோன் ஏற்கனவே நாட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் மரபணு வரிசைமுறைக்கு உட்பட்டாலன்றி மாறுபாட்டையுடைய ஒமிக்ரோன் நோயாளர்களை அடையாளம் காண முடியாது.

இந்த பிறழ்வை உடனடியாக அடையாளம் காண முடியாது என்றும், சோதனை விலை அதிகம் என்றும், இது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயலாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.