இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்கு முக்கிய அறிவுரை!

0

இலங்கையில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக நாடு திரும்புமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதர் அலினா பி. டெப்லிட்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் மாலைதீவில் உள்ள அமெரிக்கர்களை நாடு திரும்புமாறு அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை மற்றும் மாலைதீவில் சுகாதார அதிகாரிகள் எடுத்த தீவிர முயற்சிகள் எடுத்தபோதிலும், நிலைமை கடுமையானது மற்றும் சவாலானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.