இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய குறைவு ஒன்று ஏற்படவுள்ளதாக காலி மாவட்ட தங்க நகை தொடர்பான சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணக் கைத்தொழிலாளர்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த 14 சதவீத வருமான வரி மற்றும் 15 சதவீத தங்க இறக்குமதி வரிகளை நீக்குவதற்கு அரசாசங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் காலங்களில் தங்கம் ஒரு பவுணின் விலை நூற்றுக்கு 15 வீதத்தில் குறைவடையும் சங்கத்தின் தலைவர் விசும் மாபலகம தெரிவித்துள்ளார்.
இந்த வரி நிவாரணம் காரணமாக தங்க நகை செய்பவர்களுக்கும் நன்மை ஏற்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக சந்தையில் தங்கத்திற்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ள நிலையில், விலையும் திடீரென அதிகரித்துள்ளது.
இலங்கையில் தற்போது 24 கரட் ஒரு பவுன் தங்கம் ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.