இலங்கையில் அமுலாகும் புதிய சட்டங்கள்!

0

இலங்கையில் தவறு செய்யும் சிறுவர்களுக்கு தண்டனை வழங்கும் வயதை 18 ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வேலைவாய்ப்புக்கான குறைந்தபட்ச வயதை 15 முதல் 16 வயது வரை உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கிடையில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களை மீண்டும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு மற்றும் அரசாங்க ஆவணங்களை அச்சிட அரசு அச்சிடும் துறைக்கு மட்டுமே அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, அந்நிய செலாவணி நாட்டிலிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் நோக்கத்துடன், அத்தகைய ஆவணங்களை அச்சிடுவதற்கான உபகரணங்கள் வாங்குவதை மதிப்பீடு செய்யும் பணியை தேசிய திட்டமிடல் துறைக்கு ஒப்படைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.