இலங்கையில் ஆபத்தான சூழ்நிலையென எச்சரிக்கை

0

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பரவும் நோய் தொற்றுகளுக்கு மத்தியில் கோவிட் நோயாளர்களை அடையாளம் காணுவதில் சிரமம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு கோவிட் நோயாளர்களை அடையாளம் காணுவதில் சிரமம் இருப்பதானது ஆபத்தான சூழ்நிலையாகும் எனவும் எச்சரித்துள்ளார்.