இலங்கையில் இந்திய கொரோனா வைரஸ் மரபணு பரவும் ஆபத்து

0

இலங்கையில் புதிய கொரோனா மரபணு அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியாவில் பரவும் வைரஸ் மரபணு இலங்கையினுள் பரவுவதற்கு ஆபத்துக்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் மரபணு மாற்றமடைந்து வருவதனால் பரவும் வேகமும் அதிகரித்துள்ளது. 

ஒரு நபரால் அதிகமானோருக்கு கொரோனா தொற்ற கூடும் நிலைமை ஏறப்ட்டுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸின் மற்றுமொரு மரபணு உள்ளது. அந்த வைரஸ் மரபணு இலங்கையில் பரவும் அபாயம் உள்ளது. 

இந்தியாவில் இருந்து வரும் மீன்பிடி படகு ஊடாக இலங்கைக்கு இந்த வைரஸ் பரவும் ஆபத்துக்கள் உள்ளது இலங்கை வருபவர்கள் ஊடாக இந்த வைரஸ் நாட்டிள் பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.