பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருப்போரை பதிவு செய்யும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
தமது அமைச்சின் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் ஊடாக ஏற்படுகின்ற பிரச்சினைகளை தவிர்க்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
சமூக வலைத்தளங்கள் தொடர்பில் கட்டுப்பாடுகள் காணப்பட வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.