இலங்கையில் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முன்னாள் அமெரிக்க இராணுவ அதிகாரிகள்?

0

இலங்கையில் இரகசிய நடவடிக்கைகளில் முன்னாள் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டமை குறித்து இராணுவ புலனாய்வு ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், விசாரணை தொடங்கிய சிறிது காலத்தில் முன்னாள் அமெரிக்க இராணுவ அதிகாரி புக்கரெஸ்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மியான்மர் இராணுவப் புரட்சிக்குப் பிறகு அவர் இலங்கைக்கு வந்துள்ளார். அவரைத் தவிர, ஒரு நைஜீரிய நாட்டவர் இலங்கையில் ஒரு மர்மமான திட்டத்தில் பணியாற்றி வருவதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்திருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.