கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணைத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை மற்றும் வெலிகந்த ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவ்வாறு சிகிச்சை பெறும் தொற்றாளர்களில் இருவர் வைத்தியர்கள் என சுகாதார தரப்பு செய்திகள் தெரிவித்தது.
அதில் மேலும் சிலர் சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.