இலங்கையில் உச்சம் கொடுக்கின்றது சூரியன்!

0

இலங்கையில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜனவரி 14ஆம் திகதி வரையில் சூரியன் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை நண்பகல் 12.13 மணிக்கு அம்பலங்கொடை, தல்கஸ்வல, பஸ்கொட, மித்தெனிய, உஸ்வெவ மற்றும் வீரவில ஆகிய இடங்களில் சூரியன் உச்சம் பெற்று காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, சப்ரகமுவ, மேல், வடமேல், மத்திய, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.