இலங்கையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய 50 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, 190 பேர் இதுவரை கொரோனா நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், தற்போது 132 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 250 இற்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.