இலங்கையில் கொரோனா தொற்றினால் 17 ஆவது மரணம்!

0

இலங்கையில் கொரோனா தொற்றினால் 17ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யா-எல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த மரணத்துடன் சேர்த்து கடந்த வாரத்தில் கொரோனா தொற்றினால் இலங்கையில் 4 பேர் உயிரிழந்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.