இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 04 மரணங்கள் பதிவு

0

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 04 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

51 வயதுடைய ஆண், கொழும்பு 10 ஐ சேர்ந்த 45 ஆண், கம்பஹாவை சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரும் 55- 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.