இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் நிலைமையானது தற்போது கட்டுப்பாட்டில் இல்லை என பொது சுகாதார ஆய்வாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவுகையானது தற்போது நிர்வகிக்க முடியாத சூழ்நிலையை எட்டியுள்ளது என்றும் பொது சுகாதார சங்க செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.
பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள், பல்வேறு பாடசாலைகளில் உள்ள மாணவர்கள், காவல்துறை ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன், நத்தார் மற்றும் புத்தாண்டு விடுமுறை நாட்களில் பயண நகர்வுகளை எளிதாக்கியதும் கொரோனா பரவலை அதிகரிப்பதற்கு பங்களித்துள்ளது.
குறித்த காலகட்டத்தில் மேல் மாகாணத்தை விட்டு வெளியேறிய மக்களால் பிற மாகாணங்களுக்கு வைரஸ் பரவியுள்ளது.