இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்

0

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 715 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 78 ஆயிரத்து 439 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 5 இலட்சத்து 46 ஆயிரத்து 839 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 16 ஆயிரத்து 880 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 720 ஆக அதிகரித்துள்ளது.