இலங்கையில் கொவிட் தொற்றினை கட்டுப்படுத்தும் வரை பயணத்தடை அவசியம்

0

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலைமையை கட்டுப்படுத்தும் வரை பயண கட்டுப்பாட்டினை தொடர்ந்து நீண்டிக்குமாறு விசேட வைத்தியர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பயண கட்டுப்பாடு விதிப்பதன் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டாலும் மக்களுடைய உயிருக்கு ஏற்படும் ஆபத்துக்களை கணக்கிட முடியாதென அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார பின்னடைவை விடவும் மக்களின் உயிர் பெறுமதியானதென விசேட வைத்தியர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு சுகாதார பிரிவினரின் கோரிக்கைகளுக்கு செவிக்கொடுத்து மக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் பயணத்தடை விதிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை பாராட்டுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சுகாதார ஊழியர்கள் மற்றும் தாதிகளின் கோரிக்கைகளுக்கும் தீர்வு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நாடு முழுவதும் தாதிகள் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றில் ஈடுவதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.