இலங்கையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மில்லியனை கடக்கலாம்

0

கோவிட் – 19 நோயாளர்கள் பதிவாகின்றதை அவதானிக்கையில், 100 நாட்களை அடையும் போது, தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை விடவும் அதிகரிக்கக் கூடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சாதாரண கணக்கெடுப்பின்படி, ஐந்து, ஆறு தினங்களுக்கிடையே, ஒரு நபர், இரண்டு நபர்களுக்கு தொற்றை ஏற்படுத்துவராயின், ஒவ்வொரு 5 நாட்களுக்கு ஒரு முறையும், நோயாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காகும்.

அவ்வாறு ஏற்பட்டால், 100 நாட்கள் என்ற காலம் நிறைவடையும் போது, 20 தடவைகளுக்கு இந்த எண்ணிக்கை இருமடங்கானால், நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகளவில் பதிவாகக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.