இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா நோயாளிகள்! வைத்தியர் கடும் எச்சரிக்கை

0

இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து தீவிரமடைந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு எச்சரித்துள்ளது.

நாட்டினுள் தற்போது வரையிலும் மூவாயிரத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளனர். அவர்கள் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளான யாரேனும் சமூகத்திற்குள் எந்த சந்தர்ப்பத்திலும் கண்டுபிடிக்கப்படலாம் என பிரதான வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்திய மீனவர்கள் ஊடாக இலங்கை மீனவர்களுக்கு மிகவும் இலகுவாக கொரோனா வைரஸ் தொற்ற கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் முடிந்த அளவு சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்குமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.