இலங்கையில் சில பொருட்களுக்கு தடை விதிக்க தயாராகும் அரசாங்கம்!

0

இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உக்காத பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய சுற்றுசூழல் அதிகார சபை அவதானம் செலுத்தியுள்ளது.

ஒருமுறை பயன்படுத்திவிட்டு வீசப்படும் உக்காத பொருட்கள் மற்றும் தயாரிப்பு பக்கட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது.

அதற்கமைய பல்வேறு தயாரிப்புகள் உள்ளடக்கப்பட்ட சஷே பக்கட்கள் மற்றும் குடிபான கொள்கலன்கள் போன்று இலங்கை சந்தைகளில் விற்பனையாகும் பொருட்களின் பட்டியல் தயாரித்துள்ளதாக மத்திய சுற்று சூழல் அதிகார சபையின் திட கழிவு நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளர்.

இது தொடர்பிலான யோசனை ஒன்று எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல வருடங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய சுற்றுச் சூழல் பாதிப்பதே இதன் நோக்கம் என அவர் கூறியுள்ளார்.

ஒரு முறை பயன்படுத்தி விட்டு வீசப்படும் உக்காத பொருட்களால் சுற்று சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் மத்திய சுற்று சூழல் அதிகார சபை அதிகாரி தெளிவுப்படுத்தியுள்ளார்.