இலங்கையில் டிசம்பர் வரையில் அவ்வப்போது முடக்கம் – தயார் நிலையில் இருக்குமாறு தகவல்

0

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது தொடர்பில் இன்று கூடவுள்ள கோவிட் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்படவுள்ளது.

இந்த நிலையில் கோவிட் பரவல் நிலைமையை கடக்கும் கட்டத்தில் நாம் இல்லை, இன்னும் நீண்ட தூர சவால்மிகு பயணத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது என இலங்கையில் ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

டிசம்பர் மாதம் இறுதி வரையில் மிகப்பெரிய சவாலுக்கு நாம் முகங்கொடுக்க நேரிடும் என அவர்கள் எச்சரித்துள்ளதுடன், அவ்வப்போது முடக்கத்திற்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.