இலங்கையில் தடுப்பூசி அட்டை இல்லாதவர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி

0

இலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எதிர்வரும் நாட்களில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுத்தப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டைக்கு மேலதிகமாக கொவிட் தடுப்பூசி அட்டையை தம்முடன் வைத்துக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் நாட்களில் கட்டாயமாக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தடுப்பூசிகளை நிராகரிக்கும் மக்கள் எதிர்வரும் நாட்களில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நிகழ்வுகளுக்கு செல்லும் போது கொவிட் தடுப்பூசி கட்டாயமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் கொவிட் தடுப்பூசிகளை நிராகரிக்கும் மக்கள் தொடர்பில் உரிய சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதன்போது இதன் முக்கியத்துவத்தை தெளிவுப்படுத்தி தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.