இலங்கையில் தடுப்பூசி உற்பத்தி பணிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பம்!

0

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சினோவார்க்  கோவிட் தடுப்பூசிகளை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியும் என்று நம்புவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன இதனை தெரிவித்துள்ளார்.

சினோவார்க் கோவிட் தடுப்பூசிகளை உள்நாட்டில் தயாரிப்பது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக அமைந்திருந்து என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை நாட்டில் சீனாவிடம் இருந்து இரண்டாவது தொகுதி சினோபார்ம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகவியலாளர் முன்னிலையில் உரையாற்றிய பேராசிரியர் ஜெயசுமன, கடந்த சில மாதங்களாக இந்த விடயம் கலந்துரையாடப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சீன அரசாங்கத்தின் மேற்பார்வையில் சினோவாக் தடுப்பூசிகள் இலங்கையில் தயாரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசி இரு நாடுகளின் கூட்டு முயற்சியாக தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயசுமன குறிப்பிட்டுள்ளார்.