இலங்கையில் தளர்வின்றி ஜுன் ஏழு வரை முழு பயணக்கட்டுப்பாடு?

0

எதிர்வரும் ஜுன் ஏழாம் திகதி வரை பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்தி இடையில் இரண்டு நாட்கள் தளர்வை அனுமதித்துள்ள இலங்கை அரசு, அந்த இரண்டு நாட்களிலும் முழு பயணக்கட்டுப்பாட்டை விதிக்க தீர்மானித்துள்ளதாக அரச உயர்மட்ட தகவல்கள் நேற்றிரவு தெரிவித்துள்ளன.

ஏற்கனவே நேற்றுமுன்தினம் 25ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளத்தப்பட்ட போது, மக்கள் பொறுப்பின்றி நடந்து கொண்டதால் இம்மாதம் 31ஆம் திகதியும், அடுத்த மாதம் நான்காம் திகதியும் தளர்த்தப்படவிருந்த பயணத்தடையை தளர்வின்றி தொடர அரசு தீர்மானித்துள்ளதாகவும் அரசின் உயர்மட்ட தலைவர் ஒருவர் தமிழ் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் அமுல்படுத்தவும் எல்லா இடங்களிலும் மக்களின் வீடுகளுக்கு அருகில் சென்ற பொருட்களை விற்பனை செய்யும் வகையிலும் நடமாடும் விற்பனை வாகனங்களுக்கு அனுமதியளிக்கவும் அரசு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.