இலங்கையில் திரிபடைந்த டெல்டா வைரஸ் பரவும் ஆபத்து

0

இலங்கையில் பரவும் பிரித்தானிய திரிபு கோவிட் வைரஸினால் பாதிக்கப்படும் நபர்கள் 10 நாட்களின் பின்னரும் உயிரிழப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு காரணமாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இலங்கையில் கோவிட் வைரஸ் பரவல் அபாய மிக்க நிலைமை இன்னமும் நீங்கவில்லை என இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர், விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை கட்டமைப்பிற்கு தாங்கிக் கொள்ள கூடிய வகையில் தற்போது நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எனினும் மக்கள் சமூகத்திற்குள் நடமாடுவதனை பார்க்கும் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டு நாடு முடக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதே குழப்பமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் அர்ப்பணிப்பு செய்யவில்லை என்றால் பயண கட்டுப்பாட்டினை நீடிக்க கூடும். நாட்டினுள் கொவிட் மாறுபாடு பரவுவதனை தடுப்பதற்கு எடுக்க கூடிய அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மீனவர்கள் மூலம் இந்தியாவில் பரவும் அபாயமிக்க டெல்டா கொவிட் மாறுபாடு இலங்கையில் பரவும் அவதானம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.