இலங்கையில் திருமணத்துக்கான வயதெல்லை குறித்து தனிஆள் யோசனை முன்வைப்பு

0

இலங்கையில் திருமணத்துக்கான ஆகக்குறைந்த அகவையை 18ஆக இருப்பதை நிர்ணயிக்கும் தனிஆள் யோசனை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார இந்த யோசனையை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் கையளித்தார்.

திருமணத்துக்கான ஆகக்குறைந்த அகவை” என்ற தலைப்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சர்வதேச நியமங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பிள்ளைகளினதும் உரிமையை பாதுகாக்கும் வகையில் இந்த சட்டம் அமுல் செய்யப்பட வேண்டியது அவசியம் என்று பிரமித்த பண்டார தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் சிறுவர்களாக நடத்தப்பட வேண்டும் என்பதே இந்த யோசனையின் நோக்கமாகும். எனினும் யாரையும் ஓரங்கட்டுவதற்காக இது கொண்டு வரப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த யோசனையின்படி ஆண்,பெண் இரண்டு தரப்பினரும் 18 அகவையை பூர்த்தி செய்த பின்னரே திருமணம் செய்து கொள்ளமுடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குழந்தை திருமணம் தொடர்பில் நீதிமன்றத்தின் திருமண ரத்து தொடர்பாகவும் இந்த யோசனையில் முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.