இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து பிரித்தானியாவில் விவாதம்

0

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றிற்கான பிரித்தானியாவின் நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது.

அதன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ள குறித்த விவாதத்தில் இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் கடமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்கவுள்ளனர்.

பாராளுமன்றத்தின் பின்வரிசை உறுப்பினர்களான சியோபேன் மெக்டோனாக், எலியட் கோல்பர்ன் மற்றும் சேர் எட்வர்ட் டேவி ஆகியோர் குறித்த விவாதத்தை முன்வைத்துள்ளனர்.