இலங்கையின் பல்வேறு கடலோரப் பகுதிகளிலும் கடல்நீர் பச்சை நிறமாக மாறியிருப்பது பல்வேறு அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் கொழும்புக்கு அண்மித்த பகுதியான மொறட்டுவை அங்குலான பிரதேச கடற்பரப்பில் கடல்நீர் இவ்வாறு பச்சை நிறமாக தோற்றமளித்துள்ளது.
அங்கு பிடிக்கப்பட்ட மீன்களும் மஞ்சை மற்றும் பச்சை நிற தோற்றமுடையதாக இருந்துள்ளதுடன் மீனவர்களின் வலைகளும், படகுகளும் பச்சை நிறம் கொண்ட இரசாயனம் பூசப்பட்டது போன்று காட்சியளித்திருக்கின்றன.
இதுகுறித்து நாரா திணைக்களத்திடம் கடந்த 31ஆம் திகதி முறையிடப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே காலி, களுத்துறை, பயாகல, பேருவளை, சிலாபம் மற்றும் மோதர ஆகிய கடலோரப் பகுதிகளிலும் இவ்வாறு பச்சை நிறமாக கடல்நீர் மாற்றமடைந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நாரா நிறுவனம் தொடர்ந்தும் ஆய்வுகளை நடத்திவருகின்றது.