இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

0

இலங்கை மாணவர்கள் தனிமைபடுத்தப்பட்ட வாழ்க்கைக்குள் செல்லும் ஆபத்தில் இருப்பதாக வைத்தியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறுவர்கள் கையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையாகியுள்ளதால் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை விரும்பும் எதிர்கால தலைமுறையினர் உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார பணியகத்தின் பாடசாலை மாணவர்களின் சுகாதார பிரிவில் செயற்படும் சமூக வைத்தியர் அயேஷா லொக்குபாலசூரிய தெரிவித்துள்ளார்.

இணையம் ஊடாக கற்கை நடவடிக்கைகளின் பின்னரும் பிள்ளைகள் நீண்ட நேரம் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதனால் இந்த நிலைமை அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் 18 வயதிற்கு குறைவான பிள்ளைகள், மனநலம் தொடர்பான சிகிச்சைகளுக்கு வரும் அளவு 20 வீதத்தில் அதிகரித்துள்ளதாக ராகம குழந்தை மருத்துவம் மற்றும் இளம்பருவ உளவியல் நிபுணர் மியுரு சந்திரதாஸ தெரிவித்துள்ளார்.

சிறுவர்களிடையே கவலை, மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற மனநல பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.