இலங்கையில் புதிதாக பதிவான கொரோனா தொற்றாளர்கள் குறித்த விபரம் வெளியானது!

0

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்  2 ஆயிரத்து 372  பேர் நேற்று(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 2 ஆயிரத்து 361  பேரும், வெளிநாடுகளில் இருந்து வருகைத்தந்த 11 பேரும் இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 33 ஆயிரத்து  64 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஆயிரத்து 289 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 35 ஆயிரத்து  256 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.