இலங்கையில் புதிய கோவிட் தொற்றாளர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

0

இலங்கையில் புதிய கோவிட் 19 வழக்குகளின் பெரும்பாலானவை புத்தாண்டு விடுமுறைக்கு சிவனொளிபாத மலை, கதிர்காமம், நுவரெலியா மற்றும் தெற்கு கடற்கரைக்கு சென்றவர்களிடமிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகளின் ஆரம்ப ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொழும்பு சிங்கள் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய காலங்களில் கோவிட் – 19 வழக்குகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்வு காணப்படுகிறது.

தொற்றுநோய் பரவலின் பின் முதல் முறையாக, நாளாந்த கோவிட் – 19 வழக்குகள் நேற்று ஆயிரத்தை தாண்டின.

சிங்களம் – தமிழ் புத்தாண்டுக்குப் பிறகும் பொது மக்கள் ஒரே சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதை கண்காணித்துள்ளதால் கோவிட் – 19 வழக்குகள் மேலும் அதிகரிக்கும் என்று சுகாதார அதிகாரிகள் கணித்துள்ளனர்.

இதேவேளை, கோவிட் – 19 வழக்குகள் திடீரென அதிகரித்ததால் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு நிரம்பியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்துள்ளார்.