இலங்கையில் புதிய டெல்டா திரிபு அடையாளம் காணப்பட்டது!

0

இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய டெல்டா திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பிரதானி பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளாா்.

இதற்கமைய இலங்கையில் அண்மையில் அடையாளம் காணப்பட்ட பீ.1.617.2.28 திரிபை ஒத்த பீ.1.617.2.104 என்ற புதிய டெல்டா திரிபொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த புதிய திரிவு அதிக வீரியமிக்கதாக இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.