இலங்கையில் மற்றுமொரு ஆபத்து – ஒரே வாரத்தில் இருவர் உயிரிழப்பு!

0

நாட்டின் பல பிரதேசங்களில் விசர்நாய் கடிக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருவதனால் ,மக்கள் மிகுந்த அவதானமாக இருக்கும்படியும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் காலி யட்டலமத்த பிரதேசத்தில் ஒரே வாரத்தில் இரண்டு பேர் விசர் நாய் கடிக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12 வயது பாடசாலைச் சிறுவன் மற்றும் 57 வயது குடும்பஸ்தர் ஆகியோரே இவ்வாறு விசர்நாய்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து , விசர்நாய்களைப் பிடித்து ஊசியேற்றும் நடவடிக்கையில் சுகாதார அதிகாரிகள் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.