இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா?

0

கொரோனா நோயாளர்களில் கீழ் மட்டத்தில் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரித்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, மீண்டும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

பயணத்தடை மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமையே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், பொது போக்குவரத்து சேவைகள் தொடர்பில் திருப்திகொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.