இலங்கையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்! வைத்தியர்கள் எச்சரிக்கை

0

இலங்கையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என இலங்கை தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றாத வகையில் மக்கள் நடவடிக்கை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். மக்கள் உரிய சுகாதார முறைகளுக்கு அமைய செயற்படவில்லை என்றால் வெகு விரைவில் நாட்டில் மிகவும் மோசமான முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான சிரமங்களுக்குள்ளாகாமல் இருப்பதற்கு மக்கள் கட்டாயம் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

அண்மைக்காலமாக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோரில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிரித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.