இலங்கையில் மோசமான காலநிலை! நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

0

இலங்கை முழுவதும் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நாளாந்தம் சுமார் 6 லீற்றர் நீர் பருகுமாறு சிறுநீரக நோய் தொடர்பான உள்ளூர் பரிசோதனை குழு உறுப்பினரான பேராசிரியர் ஜயசுமன கேட்டுக்கொண்டுள்ளார்.

போதுமான அளவு குடிநீர் பருகவில்லை என்றால் சிறுநீரகத்தில் பாதிப்புகள் ஏற்பட கூடும் எனவும் அதற்கு மேலதிகமாக சருமத்திற்கும் பாதிப்பு ஏற்பட கூடும் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

காலை 10 மணி முதல் மாலை 3 வரையான காலப்பகுதியில் முடிந்தளவு ஓய்வில் இருக்குமாறும், பிற்பகல் வேளைகளில் பயணங்கள் மேற்கொள்ளும் போது குடை ஒன்று அல்லது தலை கவசம் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முடிந்த இளநீர் மற்றும் நீர் சத்துக்கள் அதிகம் உள்ள பழங்கள் மற்றும் மரக்கறிகளை உட்கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.