இலங்கை சந்தையில் வாகனங்களின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தவிசாளர் இந்திக சம்பத் மெரன்ஜிகோ இதனைத் தெரிவித்துள்ளார்.
சந்தையில் வாகனங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே, வாகன விலை அதிகரிப்புக்கு காரணமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.